ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி 1½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி 1½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
சோனியா காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட பா.ஜ.க. வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 178 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை தக்கவைத்தார். சோனியா காந்தி 5 லட்சத்து 34 ஆயிரத்து 918 ஓட்டுகளும், தினேஷ் பிரதாப் சிங் 3 லட்சத்து 67 ஆயிரத்து 740 ஓட்டுகளும் பெற்றனர். கடந்த தேர்தலில் சோனியா காந்தி 3 லட்சத்து 52 ஆயிரத்து 713 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய மந்திரி மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில் 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பாத்ரா சிங் சோனுவை வீழ்த்தி வெற்றி பெற்றார். அவர் 4 லட்சத்து 59 ஆயிரத்து 196 ஓட்டுகள் பெற்று இருந்தார். பாத்ரா சிங் சோனு 4 லட்சத்து 44 ஆயிரத்து 670 ஓட்டுகள் பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் சிங் 41 ஆயிரத்து 681 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார். மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி பிலிபிட் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் ஹேம்ராஜ் வர்மாவை 2 லட்சத்து 55 ஆயிரத்து 627 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வருண் காந்தி சுமார் 7 லட்சம் ஓட்டுகளை பெற்றிருந்தார்.