நாடு முழுவதும் பாரதீய ஜனதா 190 தொகுதிகளில் முன்னிலை
நாடு முழுவதும் பாரதீய ஜனதா 190 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
புதுடெல்லி
நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி, கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலை பாரதீய ஜனதா பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியும் சந்தித்தன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணைக்கை நடந்தது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மாலைக்குள் முடிவுகள் வெளியாகி விடும். இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.
முதல் கட்டமாக பாரதீய ஜனதா 193 தொகுதிகளிலும் , காங்கிரஸ் 96 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மெகா கூட்டணி 5 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
* 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை தென்சென்னை தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கவில்லை.
* திருச்சி மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலை
* ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை.
* கோவையில் பாஜக வேட்பாலர் சி.பி.ராதாகிருஷ்னன் முன்னிலை
* தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை
* மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை
* மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் முன்னிலை
* சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன் முன்னிலை
* நீலகிரி(தனி) மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை
* திருப்பூர் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் முன்னிலை