தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே ஒடிசாவில் தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ்
தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே ஒடிசாவில் காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டு உள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) வெளியாக இருக்கின்றன. இங்கு கடந்த 19 ஆண்டுகளாக பிஜூ ஜனதாதளம் சார்பில் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.
அங்கு காங்கிரஸ் கட்சி பலமுறை ஆட்சி அமைத்திருந்தாலும், நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு அமைந்தபிறகு காங்கிரஸ் கட்சியால் அங்கு ஆட்சியமைக்க முடியவில்லை. இதனால் தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருந்து வருகிறது.
ஆனால் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரும் எழுச்சியை பெற்றுள்ளது. மாநிலத்தில் பிஜூ ஜனதாதளத்துக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் போட்டி என்ற ரீதியில்தான் தேர்தல் களம் அமைந்திருந்தது. இதையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் உறுதிப்படுத்தி உள்ளன.
அதன்படி மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் கணிசமான இடங்களையும், 21 நாடாளுமன்ற தொகுதிகளில் பல இடங்களையும் பா.ஜனதா கைப்பற்றும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன. அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 15 இடங்கள் வரையே (ஒரு நாடாளுமன்ற தொகுதி) கிடைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த கட்சி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த தோல்வியை தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே காங்கிரஸ் கட்சியும் ஒப்புக்கொண்டு உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் மாநில தலைவர் நிரஞ்சன் பட்நாயக் கூறுகையில், ‘மாநிலத்தில் நாங்கள் தனித்து ஆட்சியமைக்க முடியாது. அதேநேரம் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலைவிட தற்போது சிறப்பாக செயல்பட்டோம்’ என்று தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 16 சட்டசபை தொகுதிகள் கிடைத்தன. அதேநேரம் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.