7-ம் கட்ட மக்களவை தேர்தல் - 11 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்
7-ம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7-வது இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
பீகாரில் 8, ஜார்கண்டில் 3, சண்டிகாரில் 1, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13, உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்காளத்தில் 9 என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று 7-வது இறுதிக்கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
பீகார் - 18.90%, இமாச்சல் பிரதேசம் - 24.29%, மத்திய பிரதேசம் - 28.40%, பஞ்சாப் - 23.36%, உத்தரபிரதேசம் - 21.89%, மேற்குவங்கம் - 32.15%, ஜார்கண்ட் - 30.33%, சண்டிகர் - 22.30% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எதுவும் இன்று மாலை 6.30 மணிக்கு முன் வெளியிடப்படக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.