“3 உறுப்பினர்களும் ஒரே கருத்தை கொண்டிருக்க முடியாது” - அசோக் லாவசா புகாருக்கு தலைமை தேர்தல் கமிஷனர் விளக்கம்
3 உறுப்பினர்களும் ஒரே கருத்தை கொண்டிருக்க முடியாது என அசோக் லாவசா புகாருக்கு தலைமை தேர்தல் கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா எழுப்பியுள்ள புகார் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கையாள்வது தொடர்பான இந்திய தேர்தல் கமிஷனின் உள்செயல்பாடுகள் பற்றி இன்றைய (நேற்றைய) செய்தி ஊடகங்களில் ஒரு பிரிவில் சர்ச்சை எழுந்து உள்ளது. இது விரும்பத்தகாதது, தவிர்க்கத்தகுந்தது.
3 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் கமிஷனில் ஒருவருக்கொருவர் ஒரே போன்ற கருத்துகளை கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. கருத்து வேறுபாடு இயல்பானதுதான். கடந்த காலங்களில் பல முறை இப்படி மாறுபட்ட கருத்துகள் இருந்துள்ளன. ஆனால் அவை பெரும்பாலும் தேர்தல் கமிஷனின் கட்டுக்குள் இருந்தன. தலைமை தேர்தல் கமிஷனரோ, பிற தேர்தல் கமிஷனர்களோ பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் புத்தகமாக எழுதுவது உண்டு.
தேவை எழுகிற பட்சத்தில் பொது விவாதங்களில் இருந்து நான் ஒரு போதும் தனிப்பட்ட முறையில் விலகி ஓடியது கிடையாது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது. ஒரு காரணம் இருக்கிறது.
கடந்த 14-ந் தேதி கடைசியாக தேர்தல் கமிஷன் கூட்டம் நடந்தபோது, புகார்கள் குறித்து விவாதிப்பதற்கு சில குழுக்களை அமைக்கலாம் என்று ஒருமனதாகத்தான் தீர்மானிக்கப்பட்டது. அப்போது அடையாளம் காணப்பட்ட 13 விவகாரங்களில் நடத்தை விதிகளும் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.