பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அமித்ஷா உள்துறை அமைச்சராவார் : அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அமித்ஷா மீண்டும் உள்துறை அமைச்சராவார் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-05-10 08:31 GMT
இந்தியாவில் தேர்தலின் போக்கை கண்காணித்து வரும் அமைப்பு ஒன்று, மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமித்ஷா உள்துறை அமைச்சராவார் என குறிப்பிட்டுள்ளது. இதனை மறுடுவிட் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அமித்ஷா மீண்டும் உள்துறை அமைச்சராவார். அமித்ஷா உள்துறை அமைச்சரானால் நாட்டில் என்ன நடக்கும் என்பதை சற்று யோசியுங்கள். “வாக்களிப்பதற்கு முன்னதாக தயவு செய்து யோசியுங்கள்” என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கு ஞாயிறு அன்று தேர்தல் நடக்கிறது. 

மேலும் செய்திகள்