நாடாளுமன்றத்துக்கு 4-ம் கட்ட தேர்தல்: 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
நாடாளுமன்றத்துக்கு 4-ம் கட்டமாக 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
இந்திய நாடாளுமன்ற தேர்தல், பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 961 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்து தீர்மானிக்கின்றனர்.
இன்று தேர்தலை சந்திக்கிற பீகாரின் 5, ஜார்கண்டின் 3, மத்திய பிரதேசத்தின் 6, மராட்டியத்தின் 17, ஒடிசாவின் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் தலா 13, மேற்கு வங்காளத்தின் 8, காஷ்மீரின் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
4-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 பெரிய மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் உள்ள 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ள நடிகை ஊர்மிளாவுக்கும், பா.ஜனதா கட்சி வேட்பாளர் கோபால் ஷெட்டிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வட மத்தி மும்பையில் மறைந்த முன்னாள் மத்திய மந்திரி பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜனுக்கும்(பா.ஜனதா), மற்றொரு மறைந்த முன்னாள் மத்திய மந்திரியான சுனில் தத்தின் மகள் பிரியா தத்துக்கும் (காங்கிரஸ்) இடையே ‘நீயா, நானா?’ என்கிற அளவில் போட்டி அமைந்துள்ளது.
மத்திய பிரதேசத்தைப் பொறுத்தமட்டில், முதல்-மந்திரி கமல்நாத் 9 முறை வென்ற சிந்த்வாரா நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகன் நகுல் காத் (காங்கிரஸ்) போட்டியிடுகிறார்.
முதல்-மந்திரி பதவியை தக்கவைப்பதற்காக கமல்நாத், சிந்த்வாரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். தந்தையும், மகனும் ஒரே நாளில் ஒரே தொகுதியில் தேர்தலை சந்திக்கின்றனர் என்பது முக்கிய அம்சம்.
பீகாரில் பெகுசாராய் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி கிரிராஜ்சிங்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரும் மோதுகின்றனர். இதே மாநிலத்தின் தர்பங்கா தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வென்றவர்.
மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவும் (பாரதீய ஜனதா கட்சி), நடிகை மூன்மூன்சென்னும் (திரிணாமுல் காங்கிரஸ்) அசன்சோல் தொகுதியில் கடும் போட்டியில் உள்ளனர்.
இந்த 4-வது கட்ட தேர்தலுக்காக தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா (பா.ஜனதா), தேவேந்திர பட்னாவிஸ் (பா.ஜனதா), ராகுல் காந்தி (காங்கிரஸ்), பிரியங்கா (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), நவீன் பட்நாயக் (பிஜூஜனதாதளம்), உத்தவ் தாக்கரே (சிவசேனா) உள்ளிட்டவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டினர்.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.
இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு முடிகிறது.
இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது.
பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தல் மே மாதம் 6-ந் தேதி நடக்கிறது.