‘எதிர்க்கட்சிகளிடம் கைகூப்பி வேண்டுகிறேன்’ என்ற மோடிக்கு பிரியங்கா பதிலடி

இன்றுவரையில் எனக்கு பிரதமர் மோடியின் சாதி என்னவென்று தெரியாது என பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.

Update: 2019-04-28 11:05 GMT
உ.பி.யில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு நான் எந்த சாதி என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. ஆனால் மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்ததை குறிப்பிட்டு பேசியுள்ளனர். ஆமாம், நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தான் பிறந்தேன். எதிர்க்கட்சிகளிடம் நான் கைகூப்பி வேண்டி கேட்டுக் கொள்கிறேன். 

அரசியலில் சாதியை கலக்க வேண்டாம். நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் என் குடும்பம் தான் என்றார். 

இதற்கு பதிலளித்து பேசிய பிரியங்கா காந்தி, “இன்றும் எனக்கு பிரதமர் மோடியின் சாதி என்னவென்று தெரியாது. எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் தலைவர்கள் வளர்ச்சி விவகாரத்தை மட்டும்தான் பேசுகிறார்கள். நாங்கள் யாருக்கு எதிராகவும் தனிப்பட்ட தாக்குதலையும் முன்வைக்கவில்லை,” என்றார். 

மேலும் செய்திகள்