மத்தியில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் - அமித்ஷா நம்பிக்கை

மத்தியில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Update: 2019-04-24 13:15 GMT
வாரணாசி, 

 பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, கடந்த 2014–ம் ஆண்டு தேர்தலை விட இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும். இதுவரை நடந்த 3 கட்ட தேர்தல்களில் ஓட்டுப்பதிவை வைத்து பார்க்கும் போது மத்தியில் பாரதீய ஜனதா தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

உ.பி.யில் சமாஜ்வாடி–பகுஜன் சமாஜ் கூட்டணியை விட பா.ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.  வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானலும் எந்த தொகுதியிலும் போட்டியிடலாம். வாரணாசியில் எங்கள் வேட்பாளராக பிரதமர் மோடியை அறிவித்து இருக்கிறோம்.

 வருகிற 25–ந் தேதி அவர் வாரணாசியில் வாகனத்தில் சென்று பிரசாரம் செய்கிறார். மறுநாள் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் என கூறினார். 

மேலும் செய்திகள்