இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்
இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டதால் வெளியேற்றப்பட்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்.
வங்காளதேச நடிகர் பெர்டோஸ் அகமது மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவருடைய விசாவை ரத்து செய்த இந்திய உள்துறை அமைச்சகம், அவரை கருப்பு பட்டியலிலும் இணைத்தது. விசா விதிமுறைகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து வங்காளதேச நடிகர் பெர்டோஸ் அகமது இந்தியாவைவிட்டு வெளியேறினார்.
இப்போது மேற்கு வங்காளத்தில் பிரசாரம் செய்ததற்கு பெர்டோஸ் அகமது மன்னிப்பு கோரியுள்ளார்.
பிறநாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது தவறானது என புரிந்து கொண்டேன். தெரியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரிக்கொள்கிறேன். என்னை எல்லோரும் மன்னிப்பார்கள் என நம்புகிறேன் என பெர்டோஸ் அகமது கூறியுள்ளார் என வங்காளதேச செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.