இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி
இளைஞர்கள் அதிக அளவில் வாக்கினை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது.
இன்று 2-வது கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாக்காளர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ மக்களவை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
Dear Citizens of India,
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 18, 2019
Phase 2 of the Lok Sabha polls start today. I am sure all those whose seats are polling today will strengthen our democracy by exercising their franchise.
I hope more youngsters head to the polling booths and vote!
வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கினை பதிவு செய்வார்கள் என நம்புகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.