ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் -தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை
ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என பா.ஜனதா கேட்டுக்கொண்டுள்ளது.
காவலாளி ஒரு திருடன் என பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து ராகுல் காந்தி பேசி வருகிறார். மேலும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல் காந்தி கருத்து தெரிவித்து வருகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் காந்தி மீறியுள்ளார். எனவே அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்து இருக்கிறோம் என மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.