இந்திய விமானப்படையின் தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்களும் உயிரிழந்து இருக்கலாம் என தகவல்
இந்திய விமானப்படையின் தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்களும் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியது.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் சென்று பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் பயங்கரவாத முகாம்களை அழித்தது. பயங்கரவாத முகாமில் இருந்த பயங்கரவாதிகள், அவர்களுக்கு பயிற்சியளித்த முன்னாள் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் எந்தஒரு உயிரிழப்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.
இப்போது இந்திய விமானப்படையின் தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்களும் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியது.
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டதை மறுத்துவரும் நிலையில் இந்தியா டுடே நடத்திய புலனாய்வில் பயங்கரவாதிகள் உயிரிழப்பும், ராணுவ வீரர்கள் உயிரிழப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத முகாமிற்கு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர். இந்திய விமானப்படை தாக்குதல் தொடர்பாக உள்ளூர் நபருடன் பேசி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கம் தடை செய்யப்பட்டது என பாகிஸ்தான் கூறும் நிலையில், தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டதாக அந்த இயக்கம் நிதி வசூல் செய்வதும் தெரிய வந்துள்ளது.