ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

Update: 2019-03-01 18:05 GMT
ஜம்மு-காஷ்மீர்,

குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகுண்ட் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் சிலர் வீரர்களை பார்த்து சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடியாக  சி.ஆர்.பி.எப். வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர். அதில், எதிர்பாராத விதமாக 5 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, இன்று அதிகாலை இதேபகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடத்த இடத்தில் இளைஞர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்