ஊழல் கட்சிகளின் கூட்டணி ஒன்று உருவாகி வருகிறது -மத்திய சட்ட அமைச்சர்

ஊழல் கட்சிகளின் கூட்டணி ஒன்று உருவாகி வருவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் கூறி உள்ளார்.

Update: 2019-02-04 11:14 GMT
புதுடெல்லி,

மத்திய சட்ட  அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  நிருபர்களிடம் கூறியதாவது:-

சிபிஐ அதிகாரிகள் மூலம் காவல்துறை அதிகாரிக்கு முறையாக சம்மன் அளிக்கப்பட்டது. மூன்று முறை காவல் ஆணையருக்கும் சம்மன் அளிக்கப்பட்டது.

சிபிஐ விசாரணையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடுக்கிறார். அரசியல்வாதிகளோடு சேர்ந்து காவல் ஆணையரும் தர்ணாவில் ஈடுபடுகிறார். ஊழலுக்கு எதிர்க்கட்சிகள் துணைபோகின்றன. ஊழல் வழக்கை விசாரிப்பது குற்றமா? ஊழல் கட்சிகளின் கூட்டணி ஒன்று உருவாகி உள்ளது.

2014 ஆம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்தார். மேற்கு வங்கத்தில் சிட்பண்ட்  நிதி மோசடியில் 20 லட்சம் மக்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாரதா சிட்பண்ட்  மோசடி குறித்து விசாரணை நடத்துவோம்  என்றார்.

இவ்வாறு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்