டெல்லி தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா

டெல்லி தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Update: 2019-02-01 18:53 GMT
புதுடெல்லி,

‘சஞ்சாரம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு டெல்லி தமிழ்ச்சங்கத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் இணைச்செயலாளரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமை தாங்கி, ராமகிருஷ்ணனை பாராட்டி பேசினார். அப்போது, “சஞ்சாரம் நாவலின் கதை நாதஸ்வர இசையின் கதை மட்டுமல்ல, மனித சமூகத்தின் கதை” என்று குறிப்பிட்டார்.

விழாவில் பேராசிரியர் ராஜகோபால் உள்ளிட்டோரும் வாழ்த்தி பேசினார்கள். தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் இரா.முகுந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்