காஷ்மீரின் அடுத்த முதல்–மந்திரி பா.ஜனதாவை சேர்ந்தவராக இருப்பார் - மாநில தலைவர் தகவல்
காஷ்மீரின் அடுத்த முதல்–மந்திரி பா.ஜனதாவை சேர்ந்தவராக இருப்பார் என மாநில தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு,
காஷ்மீரில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து மாநில சட்டசபையை கவர்னர் சத்யபால் மாலிக் சமீபத்தில் கலைத்து உத்தரவிட்டார். இது அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக கவர்னரை பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்முவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநில பா.ஜனதா தலைவர் ரவிந்தர் ரைனா, காஷ்மீரின் அடுத்த முதல்–மந்திரி தங்கள் கட்சியை சேர்ந்தவராகவே இருப்பார் என கூறினார். அர்ப்பணிப்புடன் கூடிய தொண்டர்களின் உழைப்பு மற்றும் சிறந்த கூட்டணி போன்றவற்றால் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரும் வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.