சட்டசபை தேர்தலை சந்திக்கிற மத்திய பிரதேசத்தில் முதல்–மந்திரியின் நெருங்கிய உறவினர் காங்கிரசில் சேர்ந்தார்

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கு இந்த மாதம் 28–ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

Update: 2018-11-03 23:00 GMT

புதுடெல்லி,

சிவராஜ் சிங் சவுகானின் நெருங்கிய உறவினரான (மனைவியின் சகோதரர்) சஞ்சய் சிங் மசானி, மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது அவர், ‘‘மத்திய பிரதேசத்துக்கு இனி சிவராஜ் சிங் சவுகான் தேவையில்லை. கமல்நாத் தான் தேவை’’ என்று கூறினார்.

கமல்நாத் நிருபர்களிடம் பேசும்போது, ‘‘சிவராஜ் சிங் சவுகானின் தவறான ஆட்சியால் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மாநிலத்தில் வளர்ச்சிக்கான புதிய தொடக்கம் தேவை என்பதுதான் மக்களின் விருப்பம். இதைத் தான் சஞ்சய் சிங் மசானி, காங்கிரசில் சேர்ந்திருப்பது காட்டுகிறது’’ என கூறினார்.

மேலும் செய்திகள்