நீதிபதி என பொய் கூறி வீடு, இடம் வாங்கி தருகிறேன் என 40 பேரிடம் மோசடியில் ஈடுபட்டவர் கைது

தெலுங்கானாவை சேர்ந்த நபர் நீதிபதி என பொய் கூறி குறைந்த விலையில் வீடு, வர்த்தக இடங்களை வாங்கி தருகிறேன் என்று 40 பேரிடம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.

Update: 2018-09-25 09:07 GMT

குர்காவன்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் கேதர் நாத் சாகர்.  பி.டெக் பட்டப்படிப்பு படித்துள்ள இவர் ஆன்லைன் வழியே வீடு, வர்த்தக கடைகள் பற்றிய மற்றும் வேலை வழங்கும் வலைதளங்கள் பற்றி அறிந்து கொள்வார்.

அதன்பின் அதில் உள்ள நபர்களின் விவரங்களை பெற்று அவர்களிடம் தன் பெயர் சாகர் என்றும் நகர நீதிமன்றம் ஒன்றில் தற்காலிக நீதிபதியாக பணியாற்றி வருகிறேன். பங்களா ஒன்றில் வசித்து வருகிறேன் என அறிமுகம் செய்து கொள்வார்.

அவர்களுக்கு தேசிய தலைநகர் பகுதியில் சொத்துகள் மற்றும் கடைகள் ஆகியவை ஒதுக்கீடு செய்ய உதவி செய்கிறேன் என கூறுவார்.  இதில் பெருமளவு பெண்களை தொடர்பு கொண்டுள்ள அவர் பிளாட் ஒன்றிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பெற்று கொண்டு வாக்குறுதி அளித்தபடி பிளாட் வாங்கி தராமல் மோசடி செய்துள்ளார்.

கடந்த வாரம் ககன் பத்ரா என்ற பெண் தனது உறவினரிடம் ரூ.4 லட்சம் பெற்று கொண்டு சொத்துகள் ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை என கூறி போலீசில் இவர் மீது புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து நடந்த விசாரணையில் சாகர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து போலியான அடையாள அட்டை மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்