வகுப்பறைக்குள் மாணவர்களிடையே கைகலப்பு; மாணவனுக்கு கத்திகுத்து
வகுப்பறையில் சக மாணவனை, மற்றொரு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனோஜ்
உத்தரபிரதேச மாநிலம், கனோஜில் ஹீரா லால் கல்லூரி உள்ளது இந்த கல்லூரியில் பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடையே வகுப்பறையில் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
இதற்கு பழி வாங்கும் நோக்கில், கல்லூரி வளாகம் அருகே, சக மாணவரை ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வகுப்பறைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.