புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி வரும் 19-ம்தேதி கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல்

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி வரும் செவ்வாய்கிழமை 19-ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2017-12-16 08:34 GMT
புதுடெல்லி,

குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது.- மழை பெய்தபோது வீடு இடிந்தும், மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததிலும் மாவட்டம் முழுவதும் 11 பேர் பலியானார்கள்.

கடற்கரை கிராமங்களை கலங்க வைத்த ஒகி புயல் விவசாய நிலங்களையும் விட்டு வைக்கவில்லை. சூறாவளியாய் சுழன்றடித்த காற்று தென்னை, ரப்பர், தேக்கு, வாழை மரங்களை வேரோடும், வேரடி மண் ணோடு சாய்த்தது. வரப்புக்கு மேல் வளர்ந்து நின்ற நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகின.

ஒகி புயலில் பலியான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறி விக்க வேண்டும், நாசமான பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாவட்டம் முழு வதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக  அறிவித்தனர். இப்போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி மற்றும் குமரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி வரும் செவ்வாய்கிழமை 19-ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தூத்தூர், சின்னதுறை பகுதிகளை பிரதமர் மோடி நேரடியாக ஆய்வு செய்யவுள்ளதாகவும், மக்களை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்