சிறுமிக்கு ரூ.10 கொடுத்து ஆசைகாட்டி பலாத்காரம் - முதியவர் உள்பட 2 பேர் கைது

சிறுமிக்கு ரூ.10 கொடுத்து ஆசைகாட்டி பலாத்காரம் செய்த முதியவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-02 20:25 GMT

பலோடா பஜார்,

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்திற்கு உட்பட்ட கோட்வாலி போலீஸ் நிலையத்தில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் குஞ்சராம் வர்மா (வயது 76) என்ற முதியவரும் ரமேஷ் வர்மா(47) என்பவரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டனர்.

பெற்றோர் வெளியே சென்றிருந்த சமயத்தில் சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த முதியவர் சிறுமிக்கு 10 ரூபாய் கொடுத்து ஆசை வார்த்தை கூறி பேசிப் பழகி வந்துள்ளார். பின்னர் ஒவ்வொரு முறையும் தனது வீட்டிற்கு வந்தால் 10 ரூபாய் தருவதாக கூறி அழைத்து பலாத்காரம் செய்யத் தொடங்கினார். இது ரமேஷ் வர்மாவுக்கு தெரியவர அவரும் சிறுமிக்கு 10 ரூபாய் கொடுத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று பக்கத்துவீட்டுப் பெண், இதைப் பார்த்துவிட்டு சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து காம கயவர்கள் இருவர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்