இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' செய்தபோது ஆற்றில் தவறி விழுந்து 2 பேர் சாவு

இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ செய்தபோது ஆற்றில் தவறி விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.;

Update:2022-10-02 00:15 IST

தாவணகெரே:

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுன் ஆசிரம காலனியை சேர்ந்தவர்கள் பவன், பிரகாஷ். இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 2 பேரும் அதிகமாக 'ரீல்ஸ்' வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரீல்ஸ் வீடியோ எடுக்க ஆசிரம காலனி பகுதியில் உள்ள துங்கபத்ரா ஆற்றுக்கு சென்றனர். ஆற்றுப்பாலத்தில் நின்று கொண்டு 2 பேரும் வீடியோ எடுத்து கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேரும் ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பவனையும், பிரகாசையும் மர்மநபர்கள் கொலை செய்து ஆற்றில் உடலை வீசியதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்