நாடு முழுவதும் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலி - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்

நாடு முழுவதும் 1,472 ஐ.ஏ.எஸ்., 864 ஐ.பி.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற தகவலை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.

Update: 2022-08-04 23:22 GMT



புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலன்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்களும், 864 ஐ.பி.எஸ். பணியிடங்களும் காலியாக உள்ளன.

* நேரடியாக பணியமர்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் உகந்த சேர்க்கையை உறுதி செய்வதற்காக பஸ்வான் கமிட்டியின் பரிந்துரைகள்படி, சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் ஆண்டுக்கு 180 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கடந்த 2012 முதல் பணிக்கு சேர்க்கப்படுகின்றனர்.

* ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பொறுத்தமட்டில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் நேரடி சேர்க்கை நியமன எண்ணிக்கை 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்