கர்நாடகத்தில் புதிதாக 1,329 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,329 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 31 ஆயிரத்து 154 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 791 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாரி, சிவமொக்கா, கலபுரகியில் தலா ஒருவரும், தார்வாரில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
10 ஆயிரத்து 105 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். ஆயிரத்து 614 பேர் குணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பு விகிதம் 4.26 ஆக குறைந்துள்ளது. மேற்கண்ட தகவலை கர்நாடக சுகாதாரத்துறை கூறியுள்ளது.