பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு ரூ.12 லட்சம் லாபம்

பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு ரூ.12 லட்சம் லாபம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-08-18 16:36 GMT

பெங்களூரு:

பெங்களூரு நகரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதன் காரணமாக நஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு ரூ.98.95 கோடி வருவாய் கிடைத்திருந்தது.

இவற்றில் மெட்ரோ ரெயில் இயக்கம், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவினங்கள் போக ரூ.12 லட்சம் லாபம் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது 2022-23-ம் நிதி ஆண்டில் மெட்ரோ ரெயில் சேவை மூலமாக நிர்வாகத்திற்கு ரூ.12 லட்சம் லாபம் கிடைத்திருந்தது. கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.28 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. தற்போது மெட்ரோ ரெயில் லாபத்தில் ஓடத் தொடங்கி இருப்பதால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்