புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதைப்பொருள் பயன்படுத்திய 10 பேர் கைது

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போதைப்பொருள் பயன்படுத்திய 10 பேர் சிக்கினர்.

Update: 2023-01-01 20:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படவில்லை. தற்போது 2023-ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட அரசு அனுமதி வழங்கியது. குறிப்பாக முககவசம் அணிய வேண்டும், நள்ளிரவு 1 மணி வரை தான் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கியது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, கோரமங்களா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அங்குள்ள பப், பார்கள், ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிந்தனர். எம்.ஜி.ரோட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடி புத்தாண்டு கொண்டாட்டினர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக 10 பேர் போலீசாரிடம் சிக்கி இருந்தனர். அவர்கள் மீது கப்பன் பார்க் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் எம்.ஜி.ரோட்டில் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஒரு இளம்பெண் அளவுக்கு அதிகமாக மதுஅருந்திவிட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை பெண் போலீஸ் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போலீசாரிடம் சில வாலிபர்கள் குடிபோதையில் வாக்குவாதம் செய்த சம்பவங்களும் அரங்கேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்