திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஒரே நாளில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 8 பேரின் உயிரை குடித்த கொரோனா
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தை மிரட்டி வரும் கொரோனாவை விரட்டும் நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் அடங்க மறுக்கும் கொரோனா வைரஸ், தொடர்ந்து நாளுக்கு நாள் தனது தாக்கத்தை அதிகரித்து வருகிறது. திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் வரை 23 பேர் இறந்தனர். இந்தநிலையில் நேற்று ஒரேநாளில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். நத்தம் தாலுகாவை சேர்ந்த 75 வயதான முன்னாள் ராணுவ வீரர் மற்றும் 72 வயதான முதியவர் ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் இறந்தனர்.
இதேபோல் வேடசந்தூர் தாலுகாவை சேர்ந்த 58 வயதான வியாபாரி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதற்கிடையே நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த 76 வயது முதியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 14 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 4 பேரின் உயிரை கொரோனா குடித்தது. அதன்படி, தேனி பாண்டிகோவில் தெருவை சேர்ந்த 47 வயது நபர் தள்ளுவண்டியில் வடை கடை நடத்தி வந்தார். இவரும், பாலூத்தை சேர்ந்த 42 வயது நபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதேபோல் கம்பத்தை சேர்ந்த 64 வயது மூதாட்டி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவரும் நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த க.புதுப்பட்டியை சேர்ந்த 56 வயது நபரும் உயிரிழந்தார். இதன்மூலம் தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.