மணல் எடுப்பதற்கு அனுமதி இல்லாததால் ஊரடங்கு காலத்தில் காய்கறிகளை விற்க பயன்படுத்தப்படும் மாட்டு வண்டி

ராணிப்பேட்டை அருகில் பாலாறு உள்ளது. அதில் இருந்து மணல் எடுத்துச் செல்வதற்கு இப்பகுதி மாட்டு வண்டிகள் பயன்பட்டு வந்தன;

Update: 2020-07-05 00:45 GMT
சிப்காட்(ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை அருகில் பாலாறு உள்ளது. அதில் இருந்து மணல் எடுத்துச் செல்வதற்கு இப்பகுதி மாட்டு வண்டிகள் பயன்பட்டு வந்தன. தற்போது மணல் எடுப்பதற்கு அனுமதி இல்லாததாலும், கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான கட்டிட பணிகள் நடக்காததாலும், இப்பகுதியில் உள்ள மாட்டு வண்டி உரிமையாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.

ஊரடங்கில் எந்தப் பொருள் இல்லையென்றாலும், காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் தேவை அவசியமான ஒன்று என்பதை உணர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள், தங்களின் மாட்டு வண்டிகளில் உணவுப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

ராணிப்பேட்டையில் வாரந்தோறும் நடக்கும் வாரச்சந்தை மூடப்பட்டதால், வாரச்சந்தை எதிரே உள்ள இடத்திலும், புதிய பஸ் நிலையம், வண்டி மேட்டுத்தெரு பகுதியிலும், மாட்டுவண்டிகளை காய்கறிகளை விற்க பயன்படுத்தி தினமும் குடும்பத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை உழவர்சந்தை காலை குறிப்பிட்ட நேரம் வரை இயங்குவதால், பொதுமக்கள் மாட்டு வண்டி காய்கறி கடைகளுக்கு வந்து காய்கறிகளை மதியம் வரை வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்