கொரோனா பரவலை தடுக்க ஓட்டல், உணவக உரிமையாளர்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு “அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்”
கொரோனா பரவலை தடுக்க அரசின் விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ஓட்டல், உணவக உரிமையாளர்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சுற்றுலாத்துறை, போக்குவரத்துத்துறை, உணவகங்கள் சங்க நிர்வாகிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தனியார் பஸ் உரிமையாளர்கள், ஓட்டல், உணவகங்களின் உரிமையாளர்கள், வாடகை கார் உரிமையாளர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-
மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி, சுற்றுலா தலங்கள் திறக்கப்படுகின்றன. ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட வருகிற 8-ந் தேதிக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு வகுத்துள்ள விதிமுறைகளை அனைத்து தரப்பினரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மேலும் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். யாரும் விதிகளை மீறி செயல்படக்கூடாது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு கட்டி பயன்படுத்தி கழுவ வேண்டும். சானிடைசர் திரவத்தை கடைகளின் நுழைவு பகுதியில் வைக்க வேண்டும்.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் அந்த சானிடைசர் திரவத்தை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். கொரோனாவை தடுக்க அரசு அவ்வப்போது வெளியிடும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சுற்றுலா தலங்களை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி தூய்மைபடுத்த வேண்டியது அவசியம்.
கொரோனாவை தடுக்கும் விஷயத்தில் சமரசத்திற்கு இடமில்லை. அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இந்த கூட்டத்தில், சுற்றுலாத்துறையினர், தங்கும் விடுதி, ஓட்டல், உணவ உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கையேட்டை எடியூரப்பா வெளியிட்டார். இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி, சுற்றுலா மேம்பாட்டு கழக தலைவர் சுருதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.