மேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
மேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேலூர்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சிறுகுடியை சேர்ந்தவர்கள் சின்னையா(வயது 23), பாலசுப்பிரமணி(19). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மேலூருக்கு வந்துள்ளனர். அப்போது பட்டூரை சேர்ந்த ஆனந்தராஜ்(22) மற்றும் விஜயகுமார்(24) ஆகியோர் அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இதற்கிடையே, சேக்கிபட்டி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
2 பேர் பலி
இந்த விபத்தில் சிறுகுடியை சேர்ந்த சின்னையா, பட்டூரை சேர்ந்த ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவரும் படுகாயத்துடன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.