பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை; அமைச்சர் காமராஜ் பேட்டி
பருத்திக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு சுகாதார பணியாளர்களின் சேவைகளை பாராட்டும் விதமாக அவர்கள் மீது பூக்களை தூவி நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து அவர்களுக்கு நிவாரண தொகுப்பை அமைச்சர் வழங்கினார். முன்னதாக 24-வது வார்டு பகுதி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பையும் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று கண்டிப்பாக கட்டுப்பாட்டுக்குள் வரும். பாகிஸ்தானில் இருந்து வந்த வெட்டுக்கிளிகளால் வடஇந்தியாவில் ஒருசில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்று பல ஆண்டுகளுக்கு முன் வெட்டுக்கிளி தாக்குதல் இருந்தது. அப்போதும் தென்னிந்திய பகுதிக்கு வெட்டுக்கிளிகள் வரவில்லை.
தக்காண பீடபூமியை கடந்து தமிழகத்துக்குள் வெட்டுக்கிளிகள் வர வாய்ப்பு இல்லை என வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே தமிழக விவசாயிகள் வெட்டுகிளிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை.
பருத்தி கொள்முதல் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் விரைவில் தங்களுடைய பணியை தொடங்குவார்கள். அதன் பிறகு பருத்திக்கு உரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கொரோனா பாதிப்பு முழுவதுமாக குறைந்தவுடன் முதலில் மாநிலத்துக்கு உள்ளேயும், அதன்பிறகு நாட்டின் எந்த இடத்திலும் ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம் என்ற அளவில் திட்டத்தை செயல்படுத்த தயாராக இருக்கிறோம். தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களின் உண்மை தன்மை குறித்து நிருபர்களிடம் தெளிவாக விளக்கி இருக்கிறேன்.
நான் தெரிவித்த அத்தனை தகவல்களும் நிதர்சனமான உண்மை. அதுகுறித்த எந்தவித விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம். கொரோனா தொற்று பரவும் நேரத்தில் தேவையில்லாமல் பிரச்சினைகள் வரக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் தெளிவாக இருக்கிறார். அரசுக்கு வரும் புகார்களை விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், முன்னாள் நகரசபை தலைவர் சுதா அன்புசெல்வன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூத்தாநல்லூரில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் காமராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது உணவு சமைக்கும் முறை, அதன் சுவை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் உணவு சாப்பிட வந்தவர்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டார். பின்னர் அவர் உணவகத்தில் செய்த உணவை ருசித்து பார்த்தார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையர் லதா, தாசில்தார் தெய்வநாயகி, அ.தி.மு.க. நகர செயலாளர் பசீர்அகமது, துணை செயலாளர் உதயகுமார், பொருளாளர் பாஸ்கரன், நகர எம்.ஜி. ஆர். மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் முகமது அஸ்ரப் மற்றும் பலர் உடன் இருந்தனர்.