பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும்- கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்

நேற்று நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதின.

Update: 2022-04-29 10:26 GMT
Image Courtesy :KolkataKnightRiders Twitter
மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. நேற்று  மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற  41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதின.

இந்த போட்டியில்  4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி தொடர்ந்து 5வது தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:

நாங்கள் ஆட்டத்தை மெதுவாக தொடங்கினோம். விக்கெட்டுகளையும் இழந்தோம். நாங்கள் குறைவாகவே ரன்கள் எடுத்தோம் .  நாங்கள் விளையாடிய விதத்துக்கு எந்த காரணத்தையும் கூற விரும்பவில்லை.

எங்கே தவறு செய்தோம் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். சரியான தொடக்க வீரர்களை  அமைக்கவில்லை. ஏனென்றால் சில வீரர்கள் ஆட்டங்களுக்கு இடையே காயம் அடைந்தனர். தொடர்ந்து தொடக்க வீர்ரகளை  மாற்றி வருவது கடந்த சில ஆட்டங்களில் கடினமாக அமைந்து விட்டது.

பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.  அதீத நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் .இவ்வாறு தெரிவித்தார் 

மேலும் செய்திகள்