நடிகர் விமல் புகார்: தயாரிப்பாளர் சிங்கார வேலனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த தயாரிப்பாளர் சிங்கார வேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2022-04-26 17:04 GMT
சென்னை,

தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் ஏப்ரல் 22ஆம் தேதி 2022, அன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்திருந்தார். 

அதில் நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு சேர வேண்டிய தொகையை பெற்று தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று சிங்கார வேலன் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் 5 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் மன்னர் வகையறா படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலனை சென்னை விருகம்பாக்கம் போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் அவருடைய நண்பர்கள் கோபி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், நடிகர் விமல் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் சிங்கார வேலனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்