விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள், வெளிவந்த புகைப்படங்கள்
குமுளியில் நடைபெற உள்ள சினிமா படபிடிப்புகாக காரில் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை
நடிகை ஷகிலாவுக்கு, மிளா என்கிற மகள் உள்ளார். திருநங்கையான இவரை ஷகிலா தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.ஆடை வடிவமைப்பாளராக உள்ள மிளா சில சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.
மிளாவுக்கு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் நண்பர்களாக உள்ளனர். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகளான திவ்யா கணேஷும், கம்பம் மீனாவும் மிளாவின் நெருங்கிய தோழிகள் ஆவர். எப்போதும் 3 பேரும் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருப்பார்கள்.
இவர்கள் குமுளியில் நடைபெற உள்ள சினிமா படபிடிப்புகாக ஒன்றாக காரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர் சென்ற காரின் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரின் பின்பகுதி மட்டும் சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.