15-வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய அபிஷேக் ஐஸ்வர்யா தம்பதி...!

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினர் இன்று தங்களது 15 ஆவது ஆண்டின் திருமண நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.;

Update: 2022-04-20 13:35 GMT
புதுடெல்லி,

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில், இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் இன்று தனது 15 ஆவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.  கடந்த 2007 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் தேதி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறாள்.

தற்போது 15ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்