ஆர்ஆர்ஆர் படம் : முட்டாள் தனமான காட்சிகளை தென்னிந்திய ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடியும் -பிரபல நடிகர்

முட்டாள் தனமான காட்சிகளை தென்னிந்திய ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடியும் ஆர்ஆர்ஆர் படம் குறித்து பிரபல நடிகர் விமர்சனம் செய்து உள்ளார்.

Update: 2022-03-26 08:54 GMT
சென்னை

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்க ராம் சரண்-ஜுனியர் என்.டி.ஆர்  இணைந்து நடித்துள்ள  ஆர் ஆர் ஆர் திரைப்படம் நேற்று வெளியானது. பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள  ஆர்ஆர்ஆர் படம் முதல் நாள் முடிவிலேயே ரூ. 200 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்ய வெற்றியை நோக்கி படம் சென்றுகொண்டிருக்கிறது.

பாலிவுட் படங்கள் எது வந்தாலும்  மோசமான விமர்சனங்கள் செய்யும் கமல்கான் . தற்போது ஆர் ஆர்ஆர் படம் குறித்து விமரசனம் செய்து உள்ளார். பார்த்துவிட்டு என்.டி.ஆர்- ராம் சரணை தோளில்  தூக்கி வைத்துக்கொள்ள அவர் துப்பாக்கி வைத்திருக்கும் 1000 நபர்களுடன் சண்டை போடுகிறார்.

இவ்வளவு முட்டாள் தனமான காட்சிகளை தென்னிந்திய ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடியும் என டுவிட் போட்டுள்ளார்.

மேலும் பாசாங்குத்தனத்தைப் பாருங்கள், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் பாலு மற்றும் சுரன் நடிகர்களுடன் நடிக்க வடக்கில் இருந்து  ஹீரோயின்களை இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் வட இந்திய அழகான நடிகர்களை தங்கள் படங்களில் நடிக்க வைப்பதில்லை என கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்