பாலிவுட் செய்த பாவங்களை "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" சுத்தம் செய்துள்ளது- கங்கனா ரனாவத்
"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை,
இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. காஷ்மீரில் 1990-ம் ஆண்டு வாக்கில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தபப்ட்டது.
இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் மார்ச் 11 ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் ஆகிய மாநில அரசுகள் வரிச்சலுகை வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பாலிவுட் திரையுலகம் இதுவரை செய்த பாவங்கள் அனைத்தையும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் சுத்தம் செய்துள்ளது.மிகவும் முட்டாள்தனமான திரைப்படங்களை உருவாக்கி அதை விளம்பரம் செய்யும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்தை விளம்பரம் செய்ய வேண்டும் " என தெரிவித்துள்ளார்.