ரஜினிகாந்த், விஜய் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்த வலிமை

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் ரஜினியின் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய்யின் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது.

Update: 2022-02-25 08:30 GMT
சென்னை

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளிலும் காலை 4 மணிக்கே ‘வலிமை’  திரையிடப்பட்டது. ரசிகர்கள் அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி 
 வருகின்றனர்.

2 வருட காத்திருப்பால் ‘வலிமை’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு தமிழகத்தில் மட்டுமே ஏறக்குறைய 1000க்கும் மேற்பட்ட  திரைகளில் இப்படம் வெளியாகியுள்ளது. 

முன்னணி தியேட்டர் ரோகினி சில்வர்ஸ்கிரீன் முதல் நாள் காட்சிகளுக்காக 23,000 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்றது என திரையரங்குகளின் மேலாளர் நிகிலேஷ் சூர்யா டுவீட் செய்துள்ளார்.

தேவி, சங்கம் ,ஈகா ,ஆல்பர்ட் போன்ற  சென்னை நகர மல்டிபிளக்ஸ் வளாகங்கள் அனைத்து திரைகளிலும் வலிமை டிக்கெடுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது! என வர்த்தக கண்காணிப்பாளர் கவுசிக் டுவீட் செய்துள்ளார்.

முதல் நாளில்  ‘வலிமை’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.36 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சென்னையில் மட்டுமே ரூ.1.82 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான அஜித் படங்களில் இதுவே அதிக வசூல் செய்த படமாகவும் கூறப்படுகிறது. மேலும் ‘அண்ணாத்த, மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களின் வசூல் சாதனையையும் ‘வலிமை’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் உள்ள மையங்களில், வலிமை அமெரிக்காவில் ஒரு சிறப்பான வணிகத்தை செய்துள்ளது, அங்கு பிரீமியர் ஷோக்களில் இருந்து 200,000 ( ரூ.1.51 கோடி) டாலர் வசூலித்துள்ளது.

மேலும் செய்திகள்