மயில்களுக்கும் மான்களுக்கும் நடுவில் சமந்தா...! 'சகுந்தலம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

நடிகை சமந்தா நடித்துள்ள 'சகுந்தலம்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Update: 2022-02-21 06:47 GMT
சென்னை, 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து சமந்தா 'சகுந்தலம்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பன்மொழித் திரைப்படமாக தயாராகும் இந்த படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற ஒக்கடு, அர்ஜுன், சைனிகுடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சகுந்தலம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரில் சமந்தா மயில்களுக்கும் மான்களுக்கும் நடுவில் வனம் ஒன்றில் அமர்ந்திருப்பது போன்று இடம்பெற்றுள்ளது. ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலையும், துஷ்யந்தனும் காதலிக்கிறார்கள்.  பின்னர் துருவாச முனிவர் சாபத்தால் அந்த காதலையே துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி துஷ்யந்தனுடன் சகுந்தலை எப்படி இணைகிறார் என்ற கதையை மையமாக கொண்டே சகுந்தலம் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்