"அஜித் மிகவும் அடக்கமான நடிகர்" - தயாரிப்பாளர் போனி கபூர்

நடிகர் அஜித் குமாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-20 14:52 GMT
சென்னை,

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து 3 வது முறையாக இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இது அஜித் நடிக்கும் 61 வது திரைப்படம். இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.  இந்த திரைப்படம் அதிரடி திகில் கதையம்சத்தில் தயாராக இருப்பதாகவும், இதில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு வேடம் வில்லத்தனமான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. 

 அடுத்த படத்திற்கான அஜித்தின் லுக்கின் நெகட்டிவ் புகைப்படம் ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில்,

நடிகர் அஜித் மிகவும் அடக்கமான நடிகர் எனவும் தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர்களால்  அதிகம் விரும்பப்படும் நடிகர் அஜித் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்