பிரான்சு திரையரங்கில் 'வலிமை' படத்தைப் பார்க்க இருக்கும் போனி கபூரின் மகள்..!
தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் பிரான்சு திரையரங்கில் 'வலிமை' திரைப்படத்தைப் பார்க்க உள்ளார்.;
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ஜீ ஸ்டுடியோசுடன் இணைந்து தயாரித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் வருகிற 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் 'வலிமை திரைப்படத்தை உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான பாரிஸ் ‘லெ கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் பார்க்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.