ரஷிய மொழியில் வெளியாகிறது கார்த்தியின் 'கைதி' திரைப்படம்

‘கைதி’ திரைப்படம் ரஷிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது;

Update: 2022-02-18 11:07 GMT
2019-ஆம் ஆண்டு நடிகர்  கார்த்தி நடிப்பில் இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  பரபரப்பு  சண்டை   காட்சிகள் மற்றும்  அப்பா - மகள் சென்டிமென்ட் கதையுடன்  வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘கைதி’.

இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். 

தற்போது 'கைதி'  படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

 இந்நிலையில் ‘கைதி’ திரைப்படம்  ரஷிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. கைதி படத்தின்  ரஷிய மொழி டிரைலர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்