வலிமை படத்தின் புதிய வீடியோ வெளியீடு..!

வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

Update: 2022-02-16 10:02 GMT
சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

'வலிமை' திரைப்படம் வரும் பிப்ரவரி 24 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது .இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே
 வெளியானது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய விடியோவை போனி கபூர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 

மேலும் செய்திகள்