நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவர், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
முக கவசம் அணியுங்கள். தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். அவருக்கு பாதிப்பு இருப்பது பற்றி அறிந்ததும், குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டும். கவனமுடன் இருங்கள் என அவருடைய ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் செய்த நிலையில், கடந்த ஜனவரி 17ந்தேதி இரவு, நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிவதாக திடீர் என்று அறிக்கை வெளியிட்டார். கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.