புகுந்த வீட்டில் கத்ரினா கைப் செய்த வேலை... நெட்டிசன்கள் பரபரப்பு கமெண்ட்
நடிகை கத்ரினா கைப் திருமணம் முடிந்த பின் புகுந்த வீட்டில் செய்த வேலைக்கு நெட்டிசன்கள் பரபரப்பு கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
புனே,
இந்தி திரைப்பட நடிகை கத்ரீனா கைப் மற்றும் நடிகர் விக்கி கவுசால் இடையேயான திருமணம் ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் கடந்த 9ந்தேதி நடந்து முடிந்தது. தன்னை விட 5 வயது இளையவரான விக்கி கவுசாலை கத்ரீனா மணந்துள்ளார்.
திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு அந்த கோட்டை கோடிக்கணக்கான செலவில், மலர்கள், வண்ண விளக்குகள் மற்றும் வரவேற்பு வளைவுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நடிகர், நடிகைகள் அழைக்கப்பட்டனர். திருமணத்துக்காக மணமக்கள் தங்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை ரூ.4 லட்சம். மேலும் உறவினர்கள், நடிகர் நடிகைகள் தங்க அங்குள்ள ஆடம்பர ஓட்டல்களின் அனைத்து அறைகளையும் முன்பதிவு செய்திருந்தனர்.
இந்த திருமணத்தில் 120 பேர் கலந்து கொள்கின்றனர் என அறிவிக்கப்பட்டு, அதற்கான இறுதி பட்டியலும் முடிவானது. கத்ரீனாவும், விக்கியும் தங்கள் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ.80 கோடிக்கு விற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அமேசான் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பு திருமணத்திலிருந்து எந்த வீடியோவும் கசிந்துவிட கூடாது என்பதற்காக கத்ரீனாவும், விக்கியும் தங்கள் விருந்தினர்களை அது சம்பந்தமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைத்துள்ளனர் என்ற தகவலும் வெளியானது.
இந்த நிலையில், தங்கள் திருமண புகைப்படங்களை முதல்முறையாக கத்ரினா கைப் - விக்கி கவுசல் தம்பதி தங்களது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 10ந்தேதி பகிர்ந்தனர்.
இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் இன்னும் சில நாட்களில் மும்பையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல நடிகர், நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் கத்ரினா, தனது இன்ஸ்டாகிராமில் இன்று புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்தியாவின் பிரபல டிஷ்களில் ஒன்றான அல்வாவை தன் கைப்பட அவர் தயாரித்து உள்ளார்.
அதனை ஒரு கிண்ணத்தில் ஏந்தியபடி புகைப்படம் வெளியிட்டு உள்ளார். திருமணம் முடிந்த கையோடு புகுந்த வீட்டில் உள்ள தன்னுடைய சொந்த பந்தங்களுக்காக கத்ரினா, இந்த சிறப்பு டிஷ்ஷை செய்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், ஓ மை கடவுளே. எங்களுடைய கத்ரினா மிக இனிமையானவர் என தெரிவித்து உள்ளார்.