சிறந்த மருத்துவம் அளித்த அரசு மருத்துவர்களுக்கு நன்றி; நடிகர் விவேக்

சிறந்த மருத்துவம் அளித்த அரசு மருத்துவர்களுக்கு நன்றி என நடிகர் விவேக் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-07-13 12:14 GMT
சென்னை,

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் சமூகநலன் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.  மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வழிகாட்டுதலின்படி 1 கோடி என்ற இலக்குடன் இதுவரை 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அவர் நட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வருகின்றன.  இதனால், தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் உயர்ந்து வருகிறது.  இந்நிலையில், அரசு மருத்துவமனை சிகிச்சை சிறந்த முறையில் உள்ளது என பாராட்டி நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது மைத்துனர், கொரோனாவால் காய்ச்சல், மூச்சு திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம்.  ஆனால் சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்