நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் உடல்நல குறைவால் மரணம் அடைந்துள்ளார்.
சண்டிகர்,
இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களில் நடித்து வந்தவர் நடிகர் ரஞ்சன் செகல் (வயது 36). நடிகர் ரந்தீப் ஹூடா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த சர்ப்ஜித் என்ற இந்தி படத்தில் செகலும் நடித்துள்ளார். இவர், திரைப்படங்கள் தவிர்த்து தொலைக்காட்சியில் கிரைம் பேட்ரல் என்ற பிரபல தொடரிலும் நடித்துள்ளார். தும் தேனா சாத் மேரா, பவார் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்துள்ளார்.
இதனுடன், பஞ்சாபி மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில், சண்டிகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல்நல குறைவால் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகள் செயலிழந்தநிலையில் மரணம் அடைந்து உள்ளார்.
கடந்த மாதம், கிரைம் பேட்ரல் தொடரில் நடித்திருந்த சபீக் அன்சாரி என்ற நடிகர் காலமானார். இவர், நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை ஹேமா மாலினி நடித்து, கடந்த 2003ம் ஆண்டில் வெளியான பாக்பன் என்ற இந்தி திரைப்படத்தில் திரைக்கதை எழுதியவர். இந்த நிலையில், செகலின் மறைவு செய்தி வெளிவந்துள்ளது.