டாஸ்மாக் திறப்பு :ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி
டாஸ்மாக் திறந்து ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை
தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் தாங்குமா தமிழகம் என்ற ஹேஷ்டாக் டிரெண்டானது.
இந்நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் டுவிட் செய்து உள்ளார்
அவர்வெளியிட்டு உள்ள டுவிட்டில்
"மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்துவிட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம்
— Kamal Haasan (@ikamalhaasan) May 8, 2020