பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிரான பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சென்னை,
பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி 8-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள பாலியல் புகார் பற்றி முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி, சென்னையில் பெண்கள் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றும், அதற்கு உரிய அனுமதி வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக சென்னையில் மே 12-ம் தேதி பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சின்மயி போராட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.